தமிழ்நாடு நாள்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு நாள் முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.அதில், 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னரும், இந்த மாநிலம் "மதராஸ் மாநிலம்" என்ற பெயரிலேயே தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு முயற்சிகள், தீர்மானங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகும் மாற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டப்பேரவையில் "தமிழ்நாடு" என்ற பெயர் அறிவிக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என அவர் நினைவுகூர்ந்துள்ளார்.அண்ணா "தமிழ்நாடு" என்ற பெயரை பேரவையில் முன்மொழிந்தபோது, அனைத்து உறுப்பினர்களும் "வாழ்க" என்று ஒருமனதாக வரவேற்ற அந்த நாளே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது என்று மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.