Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ஜார்கண்டில் மாணவர் சங்க தலைவி மீது மை வீச்சு: பேரணியில் பரபரப்பு

ஜார்கண்டில் மாணவர் சங்க தலைவி மீது மை வீச்சு: பேரணியில் பரபரப்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் ராஞ்சியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று சட்டசபையை நோக்கி மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேகா போராவும் பங்கேற்றார். பேரணி பிர்சா சவுக் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென நேகா போரா மீது மை வீசியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதனால் அங்கு அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மை வீசிய நபரை போலீசார் உடனடியாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் அமர்நாத் பாண்டே என்பது தெரியவந்தது.நேகா போரா, உமர் காலித்துக்கு ஆதரவாக இருப்பதால் இந்தச் செயலில் ஈடுபட்டதாக அமர்நாத் பாண்டே போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு