Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் நுழைய தற்காலிக தடை

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் நுழைய தற்காலிக தடை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினரும் ஏராளமான இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களால் தலைநகரில் பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போராட்டத்தின் தாக்கத்தால் டெல்லியின் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.டெல்லியைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
தமிழகத்திலும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.இந்த சூழ்நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள அனைத்து நுழைவுப் பகுதிகளும் மூடப்பட்டு, அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு