Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

சென்னை திரு.வி.க.நகரில் ரூ.49.70 லட்சத்தில் புதிய பல்நோக்கு மையம் திறப்பு

சென்னை திரு.வி.க.நகரில் ரூ.49.70 லட்சத்தில் புதிய பல்நோக்கு மையம் திறப்பு
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையக் கட்டடம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.750 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், 2024–25ஆம் ஆண்டுக்கான வார்டு மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ளது.திறப்பு விழாவில் மேயர் பிரியா கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
Advertisement
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் சொ. வேலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த பல்நோக்கு மையம், அப்பகுதி மக்களின் சமூக மற்றும் பொதுப் பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு