சென்னை சென்ட்ரல்–கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்; சில சேவைகள் ரத்து
சென்னை சென்ட்ரல்–கூடூர் ரெயில் பாதையில் உள்ள கும்மிடிப்பூண்டி யார்டில் பராமரிப்பு பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இந்த பணிகள் இன்று மற்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறுவதால், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சில ரெயில்கள் முழுமையாகவும், சில ரெயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இரவு 9.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில், பொன்னேரி–கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படாது.அதேபோல், இரவு 11.20 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் கும்மிடிப்பூண்டி மின்சார ரெயிலும், பொன்னேரி–கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலின் மீஞ்சூர்–கும்மிடிப்பூண்டி இடையிலான சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், இரவு 10.30 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி–பொன்னேரி இடையே இயக்கப்படாது.அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில், இன்று மற்றும் நாளை கும்மிடிப்பூண்டி–மீஞ்சூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், இன்று மற்றும் நாளை கும்மிடிப்பூண்டி–பொன்னேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.