கினியா: குப்பை மேட்டில் நிலச்சரிவு - 30 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனகெரியில் உள்ள டார் எஸ் சலாம் பகுதியில் மிகப்பெரிய குப்பை மேடு ஒன்று இருந்தது. மலைபோல் குவிக்கப்பட்டிருந்த அந்த குப்பை மேட்டையொட்டி ஏராளமான மக்கள் குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குப்பை மேட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, அருகில் இருந்த குடிசைகள் மண்ணுக்குள் புதைந்தன.அப்போது வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 30 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டனர்.இந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.