Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

கர்நாடகா முழு அடைப்பு போராட்டம் வாபஸ்: தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கக் கூடாது என போராடிய வாட்டாள் நாகராஜ் கைது

கர்நாடகா முழு அடைப்பு போராட்டம் வாபஸ்: தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கக் கூடாது என போராடிய வாட்டாள் நாகராஜ் கைது
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்றும், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.காவிரி நதிநீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் கர்நாடகாவில் போதிய பருவமழை இல்லாததால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பாத சூழல் ஏற்பட்டது.இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீரை திறக்க வேண்டும் என்று கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.குறிப்பாக, கன்னட அமைப்புகளின் தலைவரான வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிராக ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு கன்னட அமைப்புகளும், வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.கடந்த மாதம் 31-ஆம் தேதி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், கே.ஆர்.எஸ். அணையைத் தவிர கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பும் நிலையில் இருந்தன. அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்ததால், தமிழகத்திற்கு காவிரி நீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வந்தது.இதனால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
Advertisement
அதே சமயம், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு மீண்டும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கும் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவுசெய்தன.இதன் காரணமாக, தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து மைசூரு, கொப்பால், அத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இருப்பினும், ஓசூர் வழியாக பெங்களூருவுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.கன்னட அமைப்புகளின் போராட்டத்தால், நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், கர்நாடக அரசுப் பேருந்துகள் நீலகிரி மாவட்டத்திற்கு வழக்கம்போல இயக்கப்பட்டன. மேலும், இரு மாநிலங்களின் தனியார் வாகனங்களும் எந்தத் தடையும் இன்றி இயக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.இந்தச் சூழலில், கர்நாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அறிவித்தார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கிடையில், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர் உட்பட பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு