எம்.ஜி.ஆர். படம் முதல் நாள் பார்த்த மகிழ்ச்சியை இன்று மீண்டும் உணர்ந்தேன்’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி, தணிக்கை தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்து இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.விஜயின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமாக இது கருதப்படுவதுடன், தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் நடித்துத் திரைக்கு வந்த முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க. ஆதரவாளர்கள் நேற்று இரவு முதலே திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.சென்னையின் பல முக்கிய திரையரங்குகள்பிரமாண்டகட்அவுட்கள்,வண்ணமயமானபேனர்கள்மலர்அலங்காரங்கள்மற்றும்மின்விளக்குகளால்சிறப்பாகஅலங்கரிக்கப்பட்டிருந்தன.
ரசிகர்கள் விஜய் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தனர். மேளதாளங்கள், பட்டாசுகள், நடனங்கள் என திரையரங்குகள் திருவிழா சூழலை ஒத்த காட்சியளித்தன.இந்த நிலையில், சென்னை நகரிலுள்ள ஒரு திரையரங்கில் ‘ஜனநாயகன்’படத்தின் முதல் காட்சியை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி எவ்வளவு இருந்ததோ, அதே உணர்வை இன்று மீண்டும் அனுபவித்தேன். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், தமிழர்கள் மற்றும் திரையுலக ரசிகர்கள் கண்டுகளிக்க வேண்டிய திரைப்படம் இது” என்று தெரிவித்தார்.