உடைந்த காலுக்கு பிளாஸ்டருக்கு பதிலாக அட்டைப்பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்கள்; பிகாரில் சர்ச்சை
பிகார் மாநிலத்தில் விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு வழக்கமான மருத்துவ பிளாஸ்டர் அல்லது உரிய கட்டு போடாமல், அட்டைப்பெட்டியை பயன்படுத்தி தற்காலிகமாக கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெகுசராய் மாவட்ட அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அந்த இளைஞருக்கு, அட்டைப்பெட்டியை காலில் பொருத்தி கட்டுப்போட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர், நோயாளிக்கு உடனடி ஆதரவு மற்றும் நிவாரணம் கிடைக்கச் செய்வதற்காக தற்காலிக ஏற்பாடாக இந்த முறையை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.இருப்பினும், இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.