உக்ரைனில் பயணிகள் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: ஓட்டுநர், உதவியாளர் பலி
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள், நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. போரை நிறுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளும் இதுவரை வெற்றியடையாததால், மோதல் நீடித்து வருகிறது.இந்தச் சூழலில், உக்ரைனின் ஒடேசா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் இன்ஜின் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ரெயிலின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ரெயிலின் முன்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இருப்பினும், ரெயிலில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.