ஈரோடு ஆற்றங்கரையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இளைஞர் கைது
ஈரோடு மாவட்டத்தின் பவானி ரிங்ரோடு ஆற்றங்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒரு இளைஞரை கைது செய்துள்ளனர்.ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த புதுச்சேரியைச் சேர்ந்த பல்லா வெங்கட் சிவராம் (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.