Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ஆடி மாதம் தொடக்கம்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி விலை ரூ.350 ஆக உயர்வு

ஆடி மாதம் தொடக்கம்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி விலை ரூ.350 ஆக உயர்வு
சென்னை: ஆடி மாதம் நாளை தொடங்கவுள்ள நிலையில், அம்மன் கோவில்களில் நடைபெறும் கூழ் ஊற்றுதல், பொங்கல், தீமிதி உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.அதிகாலை முதலே சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்ததால் பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பூ வரத்து குறைந்ததால் சாமந்தி பூவின் விலை மேலும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனையாகிறது.மேலும், பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.120-க்கும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
வெளி சந்தைகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.500 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.பூ மொத்த வியாபாரிகள் கூறுகையில், ஆடி மாத கோவில் திருவிழாக்கள், ஆடி பூரம் மற்றும் ஆடி பெருக்கு போன்ற சிறப்பு நாட்கள் தொடர்ச்சியாக வருவதால், வரும் நாட்களில் பூக்களின் தேவை மற்றும் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு