Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

TNUSRB தேர்வு ஒத்திவைப்பு: வயது தளர்வு வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

TNUSRB தேர்வு ஒத்திவைப்பு: வயது தளர்வு வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB) 2026–2027 ஆண்டு திட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சீருடைப் பணியாளர் தேர்வுகள் 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது போட்டித் தேர்வர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.2026ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வயது தகுதியுடன் இருந்த பலர், தேர்வு 2027ஆம் ஆண்டில் நடைபெறுவதால் வயது வரம்பைத் தாண்டி தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, 2026ஆம் ஆண்டு வயது தகுதி பெற்ற அனைவருக்கும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் TNUSRB தேர்வுகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும் என்றும், தேவையெனில் இரண்டு ஆண்டுகள் வரை தளர்வு அளிப்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டிலேயே இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு