RM லேண்ட் புரோமோட்டர்ஸ் & பில்டர்ஸ்
மதுரை ஆனைமலை ஒத்தக்கடை பகுதியில் RM லேண்ட் புரோமோட்டர்ஸ் & பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 14-07-2026 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒத்தக்கடை மேனேஜர் டைரக்டர் திரு. பொன்ராஜ் அவர்கள் செய்திருந்தார்.
கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையில் பொதுமக்களை எவ்வாறு அணுகுவது, வாடிக்கையாளர்களிடம் திட்டங்களை எவ்வாறு எடுத்துரைப்பது என்பது குறித்து லீடர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் RM லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனத்திடம் 14 இடங்களில் பிளாட்கள் உள்ளதாகவும், அனைத்து பிளாட்களும் DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்றவை என்றும், பத்திரம், பட்டா மற்றும் சாலை வசதி இலவசமாக வழங்கப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் திரு.
ராஜமாணிக்கம் அவர்கள் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து டைரக்டர்கள் திரு. திம்மணன், திரு. பொன்ராஜ், திரு. ராமமூர்த்தி, திருமதி. மீனாட்சி ஆகியோர் திட்டங்களின் சிறப்பம்சங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சைட் மேனேஜர்கள் கருப்பு, பாண்டித்துரை, கண்ணன் உள்ளிட்ட அனைத்து தரவரிசை லீடர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களும் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.