Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 02 நவம்பர் 2026 | 16 ஐப்பசி பராபவ வருடம்

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஏற்கெனவே பல படங்களில் இணைந்து நடித்துள்ள ஷாருக்கான் - தீபிகா படுகோனே ஜோடி மீண்டும் இப்படத்தின் மூலம் திரையில் இணையவுள்ளது. ‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement
அறிவிக்கப்பட்ட வெளியீட்டுத் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என ஷாருக்கான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான ‘து மில் ஜாயே’ (Tu Mil Jaaye) வெளியிடப்பட்டுள்ளது. சச்சின் - ஜிகர் இசையமைத்துள்ள இப்பாடலை அர்ஜித் சிங் மற்றும் எட் ஷீரன் இணைந்து பாடியுள்ளனர். வெளியான பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளில் ஷாருக்கான் - தீபிகா படுகோனே இடையேயான காதல் உணர்வுகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதலும் அதிரடியும் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு