Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 02 நவம்பர் 2026 | 16 ஐப்பசி பராபவ வருடம்

டாஸ்மாக் கடையடைப்பு; 10 லட்சம் பேராவது நேற்று மது அருந்தாமல் இருந்திருப்பார்கள் - அமைச்சர் விக்னேஷ் மகிழ்ச்சி

டாஸ்மாக் கடையடைப்பு; 10 லட்சம் பேராவது நேற்று மது அருந்தாமல் இருந்திருப்பார்கள் - அமைச்சர் விக்னேஷ் மகிழ்ச்சி

தமிழகத்தில் மொத்தம் 4,040 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும்போது, வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த நடைமுறையைச் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 460 மதுபானக் கடைகள் மூடப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே, கடைகளைத் திறக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஊழியர்களுக்கான சீருடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.33 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளோம்.

Advertisement
வாரம் ஒருநாள் விடுமுறை, மாதம் இரண்டு நாட்கள் விடுப்பு, இலவச சீருடை உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கியுள்ளோம். சீருடை தைப்பதற்காக ரூ.6,000, பண்டிகைக் கால உதவியாக ரூ.20,000 வழங்கப்படுகிறது. மேலும், கடன் வசதி, மருத்துவக் காப்பீடு என ஊழியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். டாஸ்மாக் ஊழியர்கள் கடையில் பணியாற்றும் நேரத்தில் மட்டும் சீருடை அணிந்தால் போதுமானது. உண்மையான பணியாளர்களை அடையாளம் காண்பதற்காகவே இந்தச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சமூகத்தில் உரிய மரியாதையும் கண்ணியமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நேற்று நடைபெற்ற கடையடைப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், சுமார் 10 லட்சம் பேராவது மது அருந்தாமல் இருந்திருப்பார்கள். அவர்கள் செலவிட வேண்டிய ரூ.150-ஐ தங்களது குடும்பத்திற்காகக் கொடுத்திருப்பார்கள். இதை நினைக்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு