Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றிலேயே வெளியேறிய ஜோகோவிச்

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றிலேயே வெளியேறிய ஜோகோவிச்

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றிலேயே தோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறினார். இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், போலந்தைச் சேர்ந்த ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதினார். போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஹர்காக்ஸ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement
இதன் முடிவில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி ஹர்காக்ஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மறுபுறம், முன்னணி வீரரான ஜோகோவிச் 2-வது சுற்றுடன் ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார். அவரது இந்தத் தோல்வி டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு