மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி.. திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய வேட்பாளர்கள்!
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி.. திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய வேட்பாளர்கள்! மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்று மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் வெற்றியைத் தங்கள் வசமாக்கியுள்ளனர். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் வெற்றி** செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் இருந்த நிலையில், 1,84,413 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 86.26 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மரகதம் குமரவேல் 61,470 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகளைப் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 17,554 ஆகும். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 1,703 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1,441 வாக்குகளும் கிடைத்தன. தாராபுரத்திலும் தவெக வெற்றிக் கொடி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர். இந்தத் தொகுதியில் 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்தனர். மொத்தம் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இறுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.