Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

ஸ்டீவ் வாக்கை பின்னுக்குத் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை

ஸ்டீவ் வாக்கை பின்னுக்குத் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை பின்னுக்குத் தள்ளி, ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, மதிய உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஸ்மித் புதிய மைல்கல்லை எட்டினார்.

Advertisement
இதுவரை 10,929 ரன்கள் எடுத்துள்ள அவர், 10,927 ரன்களுடன் இருந்த முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக்கை முந்தி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்: 1. ரிக்கி பாண்டிங் – 13,378 ரன்கள் 2. ஆலன் பார்டர் – 11,174 ரன்கள் 3. ஸ்டீவ் ஸ்மித் – 10,929 ரன்கள் 4. ஸ்டீவ் வாக் – 10,927 ரன்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சாதனைகளைப் பதிவு செய்து வரும் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் வாக்கை முந்தியதன் மூலம் தனது சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்லைச் சேர்த்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு