Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!... முதல் நாளில் 2 போட்டிகள்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!... முதல் நாளில் 2 போட்டிகள்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 13-வது சீசன் இன்று தொடங்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தத் தொடரின் முதல் நாளில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சீசனில் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி., சர்ச்சில் பிரதர்ஸ், ஈஸ்ட் பெங்கால், இன்டர் காசி, எப்.சி. கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி என மொத்தம் 13 அணிகள் களமிறங்குகின்றன. கடந்த சீசனில் குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை அனைத்து அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் மைதானங்களில் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும் வகையில் முழுமையான லீக் சுற்று நடைபெறுகிறது.

Advertisement

தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி பலப்பரீட்சை தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பெங்களூரு எப்.சி. அணி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

இரவு ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - கோவா மோதல் இன்றைய இரண்டாவது போட்டி கோவாவில் உள்ள நேரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணியும் எப்.சி. கோவா அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

நேரடி ஒளிபரப்பு எங்கே? இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் யூடியூப் தளத்தில் நேரடியாகக் காணலாம்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு