வெற்றிப்பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவாக்கம்: திருமாவளவன் நன்றி
தமிழ்நாடு அரசின் வெற்றிப்பயணத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்திருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் வெற்றிப்பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் திருநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பேருந்து சேவை, தற்போது விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட (LSS) மற்றும் சொகுசு (Deluxe) பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்திருப்பது பாராட்டுக்குரியது. பெண்கள் மற்றும் திருநர்களைப் போலவே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப்பயணத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கடந்த 09.09.2026 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.