Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

மயிலாப்பூரில் கண்ணை கவரும் கொலு பொம்மைகள்.. களைகட்டும் நவராத்திரி விற்பனை!

மயிலாப்பூரில் கண்ணை கவரும் கொலு பொம்மைகள்.. களைகட்டும் நவராத்திரி விற்பனை!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னையின் பாரம்பரிய சிறப்புமிக்க மயிலாப்பூர் பகுதியில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் காட்சியளிக்கும் பொம்மைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நடப்பு ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி வீடுகளில் கொலு படிகள் அமைத்து பல்வேறு பொம்மைகளை அலங்கரித்து வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி காலத்தில் மயிலாப்பூர் மாடவீதிகள் கொலு பொம்மைகள் விற்பனை நடைபெறும் முக்கிய இடமாக மாறுகின்றன. இந்த ஆண்டும் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாடவீதிகளின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான கொலு பொம்மைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. வழக்கமான அம்மன் சிலைகள், தசாவதாரம், அஷ்டலட்சுமி தொகுப்புகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் ஆகியவற்றுடன், பல்வேறு புதிய வடிவங்களில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

Advertisement
மேலும், ஆன்மிகக் கதைகளை எடுத்துரைக்கும் வகையிலான பொம்மைத் தொகுப்புகளும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. கொல்கத்தா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் களிமண், காகிதக் கூழ் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நேர்த்தியாக உருவாக்கப்பட்டு, அழகிய வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சிறிய அளவிலான பொம்மைகள் ரூ.100 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பொம்மைகளின் அளவு, வேலைப்பாடு மற்றும் தரத்தைப் பொறுத்து விலை மாறுபடுகிறது. மாடவீதிகளுக்கு குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை தேர்வு செய்து, விலையை பேசி ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதி தற்போது நவராத்திரி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதேபோல், சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற பூம்புகார் விற்பனை நிலையத்திலும் சிறப்பு நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு