‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை கயாடு லோகர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நானியுடன் கயாடு லோகர் இணைந்து நடித்த ‘தி பாரடைஸ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில், தற்போது எந்தவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ள தன்னைப் பழக்கப்படுத்தி வருவதாக கயாடு லோகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் சற்று தடுமாறினேன்.
Advertisement
ஆனால் காலம் செல்லச் செல்ல சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வருகிறேன். விமர்சனம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள பழகி வருகிறேன். சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்றுதான். தொடர்ந்து கடினமாக உழைக்காமல் இருப்பதுதான் தவறு” என்று தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.