Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்

விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்
விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணிகளால், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் அந்த வழியாக இயக்கப்படும் பல்வேறு ரெயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றங்களின் படி, சில ரெயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில ரெயில்கள் வழக்கமான நிலையங்களுக்கு பதிலாக மாற்று நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சேவைகள் வழித்தட மாற்றத்துடனும், சில ரெயில்கள் தாமதமாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்–சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் உள்ளிட்ட சில சேவைகள் முண்டியம்பாக்கம் போன்ற மாற்று நிலையங்களில் இருந்து புறப்பட உள்ளன.
Advertisement
புதுச்சேரி, திண்டுக்கல், திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சில ரெயில்களின் தொடக்க நிலையங்களிலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் தாங்கள் பயணம் செய்ய உள்ள ரெயிலின் இயக்கநிலை, புறப்படும் நிலையம் மற்றும் நேரத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொண்டு பயணம் மேற்கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு