Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 21 அக்டோபர் 2026 | 4 ஐப்பசி பராபவ வருடம்

ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா

ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் விளாசி, இந்திய வீரர் ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். 36 வயது 154 நாட்களில் இந்தச் சதத்தை அடித்த பவுமா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சதமடித்த அதிக வயதுடைய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2023-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 35 வயது 285 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 120 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்திருந்தார். போட்டியின் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 110 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியைச் சந்தித்தது.

Advertisement
அப்போது களமிறங்கிய பவுமா, அணியின் பொறுப்பை ஏற்று நிதானமாகவும் உறுதியுடனும் விளையாடினார். 334 பந்துகளை எதிர்கொண்ட அவர், 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 179 ரன்கள் எடுத்தார். மார்கோ யான்சன், சைமன் ஹார்மர் ஆகியோரும் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். இந்தக் கூட்டணியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. எனினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற ஒட்டுமொத்த சாதனை ரோகித் சர்மாவிடமே உள்ளது. 2024-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 36 வயது 312 நாட்களில் அவர் சதம் அடித்ததே அந்தச் சாதனையாகும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு