இந்திய கிரிக்கெட்டில் இளம் அதிரடி பேட்ஸ்மேனாக கவனம் பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு உடனடியாக அணியில் வாய்ப்பு கிடைப்பது சவாலானது என இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவர்களில் ஒருவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்குவது தற்போதைய நிலையில் எளிதான முடிவாக இருக்காது என ஐயர் கூறியுள்ளார்.
Advertisement
வைபவ் இன்னும் மிகவும் இளம் வீரர் என்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்த அவருக்கு போதுமான கால அவகாசம் உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய தொடக்க வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்து வருகின்றனர். மேலும், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். வெளிநாட்டு மைதானங்களில் நிலவும் சூழல்களையும், அங்கு விளையாடுவதற்கான சவால்களையும் வைபவ் இப்போதே புரிந்துகொள்வது, அவரது எதிர்கால கிரிக்கெட் பயணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.