Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. தொடரின் முதல் ஆட்டம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர். ஜிம்பாப்வேக்கு எதிரான அந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்றது.

Advertisement
தென் ஆப்பிரிக்க அணிக்கு வேகப்பந்து வீச்சில் வீரர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் க்வெனா மபாகா ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு