முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. தொடரின் முதல் ஆட்டம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர். ஜிம்பாப்வேக்கு எதிரான அந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்றது. தென் ஆப்பிரிக்க அணிக்கு வேகப்பந்து வீச்சில் வீரர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் க்வெனா மபாகா ஆகியோர் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.