Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

விநாயகர் கோவிலில் ரூ.14 லட்சம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை: 2 பேர் கைது

விநாயகர் கோவிலில் ரூ.14 லட்சம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களைத் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை, டைனிங் சென்டர் முதல் தெருவில் அமைந்துள்ள ஐஸ்வர்ய விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 7 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.14 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் நெல்லையைச் சேர்ந்த சிவலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 கிலோ வெள்ளிப் பொருட்களும், ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
இதற்கிடையே, துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் சுந்தர விநாயகர் கோவிலிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று அதிகாலை கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தைத் திருட முயன்ற 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர் நேபாளத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்பதும், கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் உண்டியல் பணத்தைத் திருடும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு