Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

சபலென்காவுக்கு அதிர்ச்சி தோல்வி... டபிள்யூடிஏ பைனல்ஸ் அரையிறுதியில் மிர்ரா ஆண்ட்ரீவா

சபலென்காவுக்கு அதிர்ச்சி தோல்வி... டபிள்யூடிஏ பைனல்ஸ் அரையிறுதியில் மிர்ரா ஆண்ட்ரீவா

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தத் தொடரின் குரூப் 2 பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 19 வயதான ஆண்ட்ரீவா, சபலென்காவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் 1-4 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த ஆண்ட்ரீவா, பின்னர் தனது ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டி அடுத்தடுத்து 11 கேம்களைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் முதல் செட்டை 6-4 என தன்வசப்படுத்திய அவர், இரண்டாவது செட்டில் சபலென்காவுக்கு ஒரு கேம்கூட வழங்காமல் 6-0 என வெற்றி பெற்றார். மொத்தம் 62 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்த ஆண்ட்ரீவா, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள ஆண்ட்ரீவா, குரூப் 2 பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளார். டபிள்யூடிஏ பைனல்ஸ் ஒற்றையர் பிரிவில் அவர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisement
இதற்கிடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ஸ்விடோலினா, அடுத்த இரண்டு செட்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 6-2 என்ற கணக்கில் வென்றார். இதனால் 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் போட்டியைத் தன்வசப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா அரையிறுதிக்கான போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறார். மறுபுறம், தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்த முசோவா அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தார்.குரூப் 2 பிரிவில் ஆண்ட்ரீவா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், எஞ்சியுள்ள மற்றொரு இடத்தைப் பிடிக்க சபலென்காவும் ஸ்விடோலினாவும் மோதவுள்ளனர். இருவரும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருப்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனை அரையிறுதிக்குள் நுழைவார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு