Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

4-வது ஒருநாள் போட்டி: வில் யங் சதம் விளாசல்... நியூசிலாந்து 333 ரன்கள் குவிப்பு

4-வது ஒருநாள் போட்டி: வில் யங் சதம் விளாசல்... நியூசிலாந்து 333 ரன்கள் குவிப்பு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, வில் யங்கின் சதத்தால் 333 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை எட்டியது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான வில் யங், டிம் சீஃபெர்ட் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய சீஃபெர்ட் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 58 ரன்கள் எடுத்த நிலையில், குர்னூர் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நிக் கெல்லி 4 ரன்களிலும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 8 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

Advertisement
இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்ற வில் யங், இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இந்தக் கூட்டணி நியூசிலாந்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய ஆலனை, ரோஹித் சர்மா அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இதன்பிறகும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த வில் யங், சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் நியூசிலாந்து அணி 333 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 334 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் படேல், குர்னூர் பிரார், அவ்கிப் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு