சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (தற்போதைய பிரயாக்ராஜ்) பிறந்தார். மோதிலால் நேரு – ஸ்வரூப் ராணி தம்பதியினரின் மகனான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதால் ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று போற்றப்படுகிறார். இந்தியப் பிரதமராக மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாட்கள் பதவி வகித்த நேரு, தனது தொலைநோக்குச் சிந்தனைகளால் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
Advertisement
அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.