Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

பிலிப்பைன்ஸ் பயணிகள் கப்பலில் பயங்கர தீ விபத்து; உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

பிலிப்பைன்ஸ் பயணிகள் கப்பலில் பயங்கர தீ விபத்து; உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் இருந்து பலவான் மாகாணத்தில் உள்ள கரோன் நகரை நோக்கி சென்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 9-ந்தேதி ‘ஜன் ஆஸ்டர்’ என்ற பயணிகள் கப்பல் மணிலாவில் இருந்து புறப்பட்டது. இதில் 117 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் பயணம் செய்தனர். கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement
விபத்துக்குப் பிறகு இதுவரை 43 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கப்பல் கேப்டர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அலட்சியமாக செயல்பட்டதாக கேப்டர் மற்றும் கப்பல் ஊழியர்கள் மீது குற்றவியல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பலர் உடல் கருகி உயிரிழந்துள்ளதால், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு