பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் இருந்து பலவான் மாகாணத்தில் உள்ள கரோன் நகரை நோக்கி சென்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 9-ந்தேதி ‘ஜன் ஆஸ்டர்’ என்ற பயணிகள் கப்பல் மணிலாவில் இருந்து புறப்பட்டது. இதில் 117 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் பயணம் செய்தனர். கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்குப் பிறகு இதுவரை 43 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கப்பல் கேப்டர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அலட்சியமாக செயல்பட்டதாக கேப்டர் மற்றும் கப்பல் ஊழியர்கள் மீது குற்றவியல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பலர் உடல் கருகி உயிரிழந்துள்ளதால், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.