ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு! சென்னையில் நாளை தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.200-க்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இந்த விற்பனைத் திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தீபாவளி பண்டிகைக்குத் தேவையான மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.