Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியர் உள்பட 2 பேர் பலி

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியர் உள்பட 2 பேர் பலி

சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் சவுதி நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் இந்தியர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலால் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

Advertisement
இதனிடையே, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளை இலக்காகக் கொண்டு அண்மையில் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் சவுதி அரேபிய விமான நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு