பாலியல் குற்ற வழக்குகள் 2 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய மாவட்ட நீதிமன்றங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உறவினருடன் திருவண்ணாமலைக்கு வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 346(1)-ன் படி பாலியல் குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்றும், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.மேலும், தனது வழக்கில் 2025 நவம்பர் 4-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், 2026 ஏப்ரல் 7 வரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும், ராணிப்பேட்டையில் 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி, தனது வழக்கு உள்ளிட்ட அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைவாக முடிக்க உத்தரவிடக் கோரினார்.இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 1,920 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 1,055 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மாநிலத்தில் நிலுவையில் உள்ள 18,518 போக்சோ வழக்குகளில் 12,983 வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.