விநாயகர் சிலை ஊர்வலம்: திருச்சியில் 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம்
திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதையொட்டி, வருகிற 16-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, நெ.1 டோல்கேட்டில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம், திருவானைக்காவல் வழியாக மீண்டும் நெ.1 டோல்கேட்டை சென்றடைய வேண்டும். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளும் தற்காலிகமாக சத்திரம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்படும். திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் நகரப் பேருந்துகள், தேவைப்படும் பட்சத்தில் மாலை 6 மணிக்கு மேல் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மத்திய பஸ் நிலையம் வழியாக இயக்கப்படும். அதேபோல், பஞ்சப்பூர் மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பாலக்கரை வழியாக சத்திரம் பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர். சிலை, மாணவர்கள் சாலை, சாஸ்திரி ரோடு வழியாக செல்ல வேண்டும். துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் புறநகர் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட் சென்று மத்திய பஸ் நிலையத்தை அடைய வேண்டும். பின்னர் அங்கிருந்து வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ்சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலை முதல் அண்ணாசிலை வரையிலும் எந்தவித வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படாது. விநாயகர் சிலைகளுக்கான வழித்தடங்கள் பெரம்பலூர், அரியலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி சாலைகளில் இருந்து வரும் விநாயகர் சிலைகள் நெ.1 டோல்கேட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக காவிரி ஆற்றின் இடதுபுற கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட வேண்டும். திருவெறும்பூர் சாலை வழியாக வரும் சிலைகள் பாலக்கரை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுற பகுதிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். புதுக்கோட்டை சாலை வழியாக வரும் சிலைகள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பிரபாத் ஜங்ஷன், அஞ்சுமன் சாலை, காந்தி மார்க்கெட் வளைவு, பெரியகடை வீதி, அண்ணாசிலை வழியாக காவிரி ஆற்றின் வலதுபுறத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். திண்டுக்கல் சாலை வழியாக வரும் சிலைகள் பொன்னகர், பெரியமிளகுபாறை, கலெக்டர் அலுவலகம், வெஸ்ட்ரி ரவுண்டனா, எம்.ஜி.ஆர்.