Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் 512 செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடைய செவிலியர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர நலச் சங்கம் மூலம் மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதன்படி, 50 வயதுக்கு மிகாமல் உள்ள செவிலியர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரியில் GNM செவிலியர் பட்டயப் படிப்பு அல்லது B.Sc Nursing இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும். விண்ணப்பப் படிவம் மற்றும் பணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் தேசிய நலக் குழுமம் / தமிழ்நாடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சுய கையொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து, மாநகர நல அலுவலர் / உறுப்பினர் செயலர், சென்னை மாநகர நலச் சங்கம், பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டடம், 3ஆம் தளம், அம்மா மாளிகை, EVR பெரியார் சாலை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 25.09.2026 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேலும் விவரங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் அலுவலக நேரத்தில் 044-2561 9330, 94451 90744, 94459 10934 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு