நாகர்கோவில் - தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரெயில்
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு ரெயில்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06050) இன்று (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று இரவு 11 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில், இரவு 11.30 மணிக்கு வள்ளியூர் சென்றடையும். தொடர்ந்து நெல்லைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கும், கோவில்பட்டிக்கு அதிகாலை 1.03 மணிக்கும் வந்து புறப்படும்.