நாகர்கோவில் - தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரெயில்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

நாகர்கோவில் - தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரெயில்

நாகர்கோவில் - தாம்பரம் இடையே இன்று இரவு சிறப்பு ரெயில்

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு ரெயில்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06050) இன்று (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று இரவு 11 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில், இரவு 11.30 மணிக்கு வள்ளியூர் சென்றடையும். தொடர்ந்து நெல்லைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கும், கோவில்பட்டிக்கு அதிகாலை 1.03 மணிக்கும் வந்து புறப்படும். அதன்பிறகு சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரெங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரெயில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 15 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 சேர் கார் பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் மற்றும் பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.