Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

நர்சு வேடத்தில் வந்து மயக்க ஊசி செலுத்தி மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு – மர்ம பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு

நர்சு வேடத்தில் வந்து மயக்க ஊசி செலுத்தி மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு – மர்ம பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே, நர்சு போல் வேடமிட்டு மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற பெண்ணைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தனியாக வசித்த மூதாட்டி ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (70). கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சுடிதார் அணிந்து, நர்சுகள் அணியும் மேலங்கியைப் போட்டுக்கொண்ட பெண் ஒருவர் வள்ளியம்மாளின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த வள்ளியம்மாளிடம், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து பயிற்சிப் பணிக்காக வந்திருப்பதாகவும், அவருக்கு ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து வள்ளியம்மாளின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்த அந்தப் பெண், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும், ஊசி செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். மயக்கமடைந்த மூதாட்டியிடம் நகை திருட்டு** வீட்டில் வேறு யாரும் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண், வள்ளியம்மாளைக் கட்டிலில் படுக்கவைத்து நரம்பில் ஊசி செலுத்தியுள்ளார். சில நிமிடங்களிலேயே வள்ளியம்மாளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து கண்விழித்துப் பார்த்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisement
அப்போதுதான் நர்சு போல் வந்த பெண் தனக்கு மயக்க ஊசி செலுத்தி நகையைப் பறித்துச் சென்றதை அவர் உணர்ந்தார். இதையடுத்து, வள்ளியம்மாள் கண்ணீருடன் அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வள்ளியம்மாளிடம் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் விசாரித்தனர். அப்போது, நகையைப் பறித்துச் சென்ற பெண் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று முதியவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தது தெரியவந்தது. அந்த வகையில், வள்ளியம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு அவருக்கு மயக்க ஊசி செலுத்தி நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மர்மப் பெண் ஒருவர் கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவில் அருகே காரில் வந்து இறங்குவதும், சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் காரில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நர்சு போல் நடித்து மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்ற பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு