Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 17 அக்டோபர் 2026 | 31 புரட்டாசி பராபவ வருடம்

திருப்பூரில் 1,800 ஆண்டுகள் பழமையான மண்பாண்டங்கள் கண்டெடுப்பு

திருப்பூரில் 1,800 ஆண்டுகள் பழமையான மண்பாண்டங்கள் கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள சேவூரில், அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுமார் 1,800 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இரண்டு மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். பழங்கால வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த அவினாசி கொங்கு மண்டலத்தின் தொன்மையான வரலாற்றுடன் தொடர்புடைய அவினாசி பகுதியில், பழங்கால நடுகற்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. இந்த வரிசையில், தற்போது சேவூரில் இரண்டு பழமையான மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விளையாடியபோது கிடைத்த தொல்லியல் சான்றுகள் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவரின் காலில் மண் ஓடு போன்ற பொருள் தட்டுப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது மண்பாண்டம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் தொல்லியல் துறை அலுவலர் ஜெயபிரியா மற்றும் பொறுப்பாளர் சுந்தரகணேஷ் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஆய்வு செய்து மண்ணைத் தோண்டியபோது, மற்றொரு மண்பாண்டமும் கண்டெடுக்கப்பட்டது. 1,800 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் கிடைத்துள்ள இரண்டு மண்பாண்டங்களும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தொல்லியல் துறையினர் மதிப்பிடுகின்றனர். இந்த மண்பாண்டங்கள், அக்காலத்தில் இறந்தவர்களின் நினைவாகவும் அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்ட கலயங்களாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Advertisement
பழங்காலத்தில் இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் உணவு தானியங்களையும் மண்பாண்டங்களில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. எனவே, தற்போது கிடைத்துள்ள பொருட்கள், சேவூர் பகுதியில் பண்டைய மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரங்களாகப் பார்க்கப்படுகின்றன. மேலும் பல இடங்களில் ஆய்வு நடத்தத் திட்டம் பள்ளி மைதானத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்கள் தொல்லியல் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் மண்ணைத் தோண்டி ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வுகள் மூலம் சேவூர் பகுதியின் பழங்கால வரலாறு தொடர்பாகப் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கக் காசுகள் தயாரிக்கப்பட்ட இடமாக இருந்ததா சேவூர்? பண்டைய காலத்தில் சேவூர் தங்கக் காசுகள் அச்சடிக்கப்பட்ட இடமாக விளங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்கு அருகில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ஆகியவையும் அமைந்துள்ளன. இந்தக் கோவில்களில் சுரங்கப்பாதைகள் இருந்ததாகவும், அவற்றின் வழியாக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்ல முடிந்ததாகவும் முன்னோர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேவூரில் தொடர்ந்து கிடைத்து வரும் தொல்லியல் தடயங்களைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் தொன்மையான வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு