Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 128 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்த அந்த அமைப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில், அக்டோபர் 18 அல்லது 25 அல்லது நவம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி காவல்துறை டிஜிபியிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது காவல்துறை உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேரணி நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, ஆர்எஸ்எஸ் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்எஸ்எஸ் தரப்பில், ஆண்டுதோறும் பேரணி நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுப்பதாக வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு, பேரணி நடத்துவதற்கு 21 நாட்களுக்கு முன்பாக, அதாவது அக்டோபர் 3ஆம் தேதிதான் விண்ணப்பம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

Advertisement
மேலும், கோரப்பட்ட வழித்தடம் அனுமதி வழங்குவதற்கு ஏற்றதல்ல என்றும், விழாக் காலத்தில் பேரணிக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களுக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்றும் வாதிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விஜயதசமிக்கு முந்தைய நாளான அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். பேரணிக்கு அனுமதி மறுப்பதற்காக காவல்துறை தரப்பில் புதிதாக எந்தக் காரணமும் முன்வைக்கப்படவில்லை என்றும், ஏற்கெனவே நீதிமன்றம் நிராகரித்த காரணங்களையே மீண்டும் தெரிவிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும், பேரணிக்கான நேரம், வழித்தடம் மற்றும் இடங்களை அக்டோபர் 19ஆம் தேதிக்குள் இறுதி செய்யவும் உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணிகள் நடைபெற உள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு