தொப்பூர் கணவாயில் விபத்து: கோவில்பட்டி தம்பதி உயிரிழப்பு
தொப்பூர் கணவாயில் விபத்து: கோவில்பட்டி தம்பதி உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர்.பெங்களூருவில் வசித்து வந்த 59 வயதான தங்க மாரியப்பன் மற்றும் அவரது மனைவி 54 வயதான லதா, சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். காரை லதாவின் சகோதரர் செந்தில்குமார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.பயணத்தின் போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் இரண்டு லாரிகள் மீது மோதியதால் கார் கடுமையாக சேதமடைந்தது.இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த தங்க மாரியப்பன் மற்றும் செந்தில்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்க மாரியப்பனும் உயிரிழந்தார். செந்தில்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்தால் தர்மபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மீட்பு பணியாளர்கள் சேதமடைந்த வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.