Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு; உறவினர்கள் போலீசார் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு; உறவினர்கள் போலீசார் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலத்தை, கடந்த ஜூலை 17-ஆம் தேதி காலை சட்டவிரோத மது விற்பனை தொடர்பான விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதே நாள் மாலையில், உடலில் காயங்களுடன் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம், இன்று காலை உயிரிழந்தார்.

Advertisement
இந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள், போலீசார் தாக்கியதன் விளைவாகவே அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்பும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மாற்றுத்திறனாளி சபரிவர்மன், குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது உடலில் 19 காயங்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு