திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் கீர்த்தனா குடும்பத்துடன் தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் கீர்த்தனா குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் கீர்த்தனா குடும்பத்துடன் தரிசனம்

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். திருமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு வருகின்றனர். இதேபோல், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அவ்வப்போது கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டார்.