Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

திருச்சியில் சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனையிலேயே குத்திக்கொன்ற கணவர்

திருச்சியில் சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனையிலேயே குத்திக்கொன்ற கணவர்
திருச்சியில் சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனையிலேயே குத்திக்கொன்ற கணவர் திருச்சி தீரன்நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண், அவரது கணவரால் மருத்துவமனையிலேயே குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தெரிவித்த தகவலின்படி, சம்பத்குமார் (40) என்பவர் தனது மனைவி கவிதாவுடன் ஏற்பட்ட தகராறின் போது வீட்டில் இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த கவிதாவை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற சம்பத்குமார், சிகிச்சையில் இருந்த கவிதாவை கூர்மையான கருவியால் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.
Advertisement
இந்த தாக்குதலில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உறையூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணையை தொடங்கினர். மேலும், தப்பிச் சென்ற சம்பத்குமாரை தேடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு