தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு; முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு; முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்

தொழில் முதலீடு மாநாட்டில் பங்கேற்பு; முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 18 முதல் 22-ந்தேதி வரை டாவோஸில் மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-கிளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 18 முதல் 22-ந்தேதி வரை உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார். உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசு பிரதிநிதிகள், 1,000-க்கும் அதிகமான முன்னணி சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் பங்கேற்க உள்ளனர். முதலீடு, பொருளாதாரம் குறித்து ஆலோசனை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகள் ஒன்றுகூடும் இந்த மாநாட்டில், பொருளாதாரம், முதலீடு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். சர்வதேச அளவில் நிலவும் பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகளைக் கண்டறிவது தொடர்பான ஆலோசனைகளும் இடம்பெறும். இந்தக் கூட்டத்தில் விஜய் பங்கேற்பதன் மூலம் தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழல் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சர்வதேச கவனம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் கொள்கை விவாதங்களில் அரசியல் தலைமைக்கு முக்கியத்துவம் டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் நேரடியாகக் கலந்துகொள்வது, தமிழக அரசின் முதலீடு மற்றும் தொழில் கொள்கை சார்ந்த அணுகுமுறையில் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பயணம் அரசின் செயல்பாட்டு அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் கொள்கைகளை வகுப்பது தொடர்பான விவாதங்களில் அரசியல் தலைமை நேரடியாக அதிக அளவில் பங்கேற்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தின் முயற்சி முதலீடுகளைப் பெறுவதில் மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வரும் சூழலில், தமிழகமும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், வளர்ந்து வரும் தொழில் துறைகளுக்கான முக்கிய மையமாகத் தமிழகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் வேகமாக வளர்ச்சியடையக்கூடிய தொழில் துறைகளில் முதலீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பது தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சித் திட்டங்களையும் சர்வதேச அளவில் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை டாவோஸ் உலகப் பொருளாதார மன்றக் கூட்டங்களில் தமிழகத்தின் முன்னாள் தொழில்துறை அமைச்சர்கள் பெருமளவில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது முதல்-அமைச்சர் விஜய் நேரடியாகக் கலந்துகொள்ள இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.