Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

திரை இசைத்துறையில் மீண்டும் ஒரு மறைவு... பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

திரை இசைத்துறையில் மீண்டும் ஒரு மறைவு... பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

தமிழ் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல பின்னணி பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் (75) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணராஜ், தமிழ் திரைப்படங்களில் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’, ‘கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா’, ‘சோக்கு சுந்தரி’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தார். ஏற்கெனவே, பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா கடந்த 17ஆம் தேதி காலமானார். தொடர்ந்து, அவரது சகோதரர் மகன் கார்த்திக் சபேஷும் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இத்தகைய சூழலில், பின்னணி பாடகர் கிருஷ்ணராஜின் மறைவும் திரையிசைத் துறையினருக்குப் பெரும் இழப்பாக அமைந்துள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு